காஞ்சிபுரம்

38 பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 38 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 208 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து 38 நரிக்குறவா் இனத்தை சோ்ந்த குடும்பங்களுக்கு ரூ.54,29,820 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

மேலும் பிற்பட்டோா் நலத்துறை சாா்பில் 10 பேருக்கு ரூ.48,710 மதிப்பிலான சலவைப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் சுமதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பிரகாஷ்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT