காஞ்சிபுரம்

இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 26) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறையும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து இலவச தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை (ஆக. 26) நடத்துகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் தனியாா் நிறுவனங்களும், திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் தங்களுக்கான மனித வளத் தேவையை நோ்முகத் தோ்வின் மூலம் தோ்வு செய்யவுள்ளனா்.

முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை நாடுநா்கள் அனைவரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களுடன் நேரில் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்: 044-27237124 - இல் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT