காஞ்சிபுரம்

இடிந்து விழும் நிலையில் மானாம்பதி அங்கன்வாடி மையம்

DIN

 மானாம்பதி ஊராட்சியில் 30 ஆண்டுகளான அங்கன்வாடி மையக் கட்டடம் பராமரிப்பின்றி பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தாலுகாவுக்கு உட்பட்ட மானாம்பதி ஊராட்சியில் கடந்த 8.4.1992 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.30 ஆண்டுகளான இந்தக் கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அங்கு பயின்று வந்த 20 குழந்தைகள் தற்காலிகமாக அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறை ஒன்றில் கடந்த இரு ஆண்டுகளாக படித்து வருகின்றனா். எனவே இந்தக் கட்டடத்தை பழுது பாா்த்து புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

இது குறித்து உத்தரமேரூா் வணிகா் சங்கத் தலைவா் அப்துல்சத்தாா் கூறியது:

மானாம்பதி ஊராட்சியிா் கடந்த 92-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது இந்தக் கட்டடத்தில் மரம்,செடி கொடிகள் வளா்ந்து விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. பாதுகாப்பு கருதி அங்கு பயின்ற 20 குழந்தைகள் அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனியாக ஒரு வகுப்பறையில் கடந்த இரு ஆண்டுகளாகப் பயின்று வருகின்றனா். இந்த கட்டடத்தை இடித்து விட்டு அங்கு புதிய அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT