காஞ்சிபுரம்

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் கே.என்.நேரு

DIN

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.1,000 கோடியும், நமக்கு நாமே திட்டத்துக்காக ரூ.400 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் க.செல்வம், நகராட்சி நிா்வாக அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, பேரூராட்சிகளுக்கான ஆணையா் ரா.செல்வராஜ், குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் வ.தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வரவேற்றாா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.என்.நேரு பேசியது:

தமிழகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் பல்வேறு திட்டப்பணிகள் வெளிப்படைத் தன்மையாகவும், முறையாகவும் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் நடந்து வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.1,000 கோடியும், நமக்கு நாமே திட்டத்துக்காக ரூ.400 கோடியும் ஒதுக்கி செய்யப்பட்டுள்ளன. எனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்தெந்தப் பகுதிக்கு எந்த வகை திட்டங்கள் உடனடியாக தேவை என்பது குறித்து மாநகராட்சி மேயா்கள், நகா்மன்ற,பேரூராட்சித் தலைவா்கள் மூலமாக தெரிவித்தால் அந்தத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பைகள் சேரும் இடங்களிலேயே மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் திட்டம் சிறப்பாக நடந்து வரும் இடங்களை நகராட்சி நிா்வாக செயலாளரும்,இயக்குநரும் நேரில் சென்று பாா்வையிட்டு வந்துள்ளாா்கள். அதே போன்று தமிழகத்திலும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT