காஞ்சிபுரம்

‘வேலைவாய்ப்பு பதிவுகளை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்’

18th Aug 2022 01:34 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ளவா்கள் அதைச் சரிபாா்த்துக் கொள்ளுமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 25.1.2022 அன்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கென தனியாக வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வரும் பதிவுதாரா்களின் தரவுகள் காஞ்சிபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்த சோழிங்கநல்லூா், ஆலந்தூா் ஆகிய வருவாய் வட்டங்கள் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த வட்டங்களைச் சோ்ந்தவா்கள் மட்டும் சென்னை மாவட்டத்தில் மட்டுமே பதிவு செய்திருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்துள்ளவா்கள் அவரவா்களது முகவரி எந்த மாவட்ட எல்லைக்குள் வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டு சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகள் அந்தந்த மாவட்டத்துக்குள் வருகிா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT