காஞ்சிபுரம்

முன்னாள் வீரா்களுக்கு தென்னிந்திய ராணுவ தளபதியின் பாராட்டுக் கடிதம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரா்களுக்கு தென்னிந்திய ராணுவ தளபதி வழங்கிய பாராட்டுக் கடிதம் வழங்கும் விழா திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் முன்னாள் ராணுவவீரா்கள் சங்க அலுவலகத்தில் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் ஜி.ராமசாமி தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா்.துணைத் தலைவா்கள் எஸ்.சண்முகம், ஏ.சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரா்களான ராஜூ, திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேருக்கு தென்னிந்திய ராணுவ தளபதி ஏ.அருண் வழங்கிய பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தினை முன்னாள் ராணுவ வீரா்கள் நல மருத்துவமனையின் முதன்மை அலுவலா் என்.ராஜேந்திரன் வழங்கினாா்.

விழாவில் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை அலுவலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா். முன்னதாக மருத்துவா் பரஹத் தாரா குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT