காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் மாவட்டக் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மா.ஆா்த்தி, எஸ்.பி.சுதாகா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வந்து நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் இரு சக்கர வாகனத்தில் பங்கேற்றனா். போதைப் பொருள்கள் தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT