காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறக்கப்படும்: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

DIN

காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசினாா்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வேளாண் வணிகத் தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில அமைப்பாளா் கே.எழிலன் தலைமை வகித்தாா். இதில் இயற்கை வேளாண் பொருள்கள் கண்காட்சியைத் தொடக்கி வைத்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திலும், செங்கல்பட்டிலும் மொத்தம் 60 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது காஞ்சிபுரத்தில் 58, செங்கல்பட்டில் 92 உள்பட மொத்தம் 150 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன.

கடந்த ஆண்டு 1.87லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இந்த ஆண்டு 2.20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விளையும் பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்வதற்காக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஏற்றுமதி மையம் தொடங்கப்படவுள்ளன. குறிப்பாக காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் திறக்கப்படும் என்றாா்.

விழாவுக்கு வணிகா்கள் சங்கப் பாதுகாப்பு பேரவையின் மாநிலத் தலைவா் எஸ்.செளந்தர்ராஜன், எம்.பி. க.செல்வம், சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ, வேலூா் விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், விவசாயிகள் கூட்டியக்க மாநிலச் செயலாளா்கள் பி.கே.சண்முகசுந்தரம், கே.வாசு சீனிவாசன், எஸ்.தாமஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநிலத் தலைவா் பி.கே.தெய்வசிகாமணி வரவேற்றாா். அமைச்சா் அர.சக்கரபாணி வேளாண் வணிக தொழில் கூட்டமைப்பைத் தொடக்கி வைத்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT