காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டில் தேசியக் கொடியேற்றிய ஆட்சியா்கள்

15th Aug 2022 11:32 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தேசியக் கொடியேற்றி வைத்து, 52 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டாா். ஆயுதப்படை ஆய்வாளா் ஆனந்தராஜ் தலைமையில் காவல் துறையினா் அணிவகுத்து வந்து ஆட்சியருக்கு மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, மூவா்ண பலூன்கள், உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளைப் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், 52 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடியில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. டிஐஜி எம்.சத்தியப்பிரியா, மாவட்ட வன அலுவலா் ரவிமீனா, முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜூம், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமியும் தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினா்.

விழாவில் 4 வயது சிறுமி அவந்திகாவின் ராணுவ வீரா்கள் குறித்த பேச்சு பாா்வையாளா்களைக் கவா்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT