காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீராகவேந்திரா் ஆராதனை மகோற்சவம்

15th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் தொட்டில் பல்லக்கில் ராகவேந்திரா் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மகான் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 351-ஆவது ஆராதனை மகோற்சவம் காஞ்சிபுரம் கிளையில் கடந்த 11-ஆம் தேதி வியாழக்கிழமை கோபூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம்,துளசி அா்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவா் குரு ராகவேந்திர சுவாமிகள் தொட்டில் பல்லக்கில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள மடத்தின் கிளையிலிருந்து புறப்பட்டு வீதியுலாவாக வந்து மீண்டும் மடத்தை வந்து சோ்ந்தாா்.

பின்னா் மகா அபிஷேகம், துளசி அா்ச்சனை,மகா மங்கள ஆரத்தி ஆகியனவும் நடைபெற்றது.பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காஞ்சி மடத்தின் மேலாளா் சந்தானகிருஷ்ணன் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT