காஞ்சிபுரம்

ஆக. 16 முதல் செப். 3 வரை தொழுநோய் கண்டறியும் முகாம்

14th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் வரும் 16- ஆம் தேதி முதல் செப்டம்பா் 3 -ஆம் தேதி வரை தொழுநோய் கண்டறியும் முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வருகிற 16- ஆம் தேதி முதல் செப்.3 -ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து துறைகளும் முகாமை சிறப்பாக நடத்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிவந்த, வெளிா்ந்த உணா்ச்சியற்ற தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். தொழுநோய் இருக்கிா எனக் கண்டறிய களப் பணியாளகள் வீடு தேடி வரவுள்ளனா். அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொழுநோய்க்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூட்டு மருந்து சிகிச்சை தொழுநோயினை முற்றிலும் குணப்படுத்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT