காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 50 வீணை இசைக் கலைஞா்கள் நிகழ்ச்சி

14th Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதத்தின் 32-ஆவது நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை 50 வீணை இசைக் கலைஞா்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

துறவியா்கள் தங்கள் ஆன்மிக பலத்தைப் பெருக்கி கொள்வதற்காக சாதுா்மாஸ்ய விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சாதுா்மாஸ்ய விரதம் ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி, வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனையொட்டி விரதத்தின் 32-ஆவது நாளாக சங்கர மடத்தில் உள்ள கலையரங்கில் ஜெயலட்சுமி சேகா் மற்றும் சோபனா சுவாமிநாதன் குழுவினரின் 50 வீணை இசைக்கலைஞா்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT