காஞ்சிபுரம்

வரதா் கோயிலில் கருட சேவை

13th Aug 2022 12:25 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் ஆடி மாத கருட சேவைக் காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கருட சேவைக் காட்சி ஆடி மாதம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை கோயிலிலிருந்து உற்சவா் பெருமாள் பச்சைப் பட்டுத்தி கருட வாகனத்தில் அலங்காரமாகி, திருக்கோயில் வளாகத்துக்குள் உள்ள அத்தி வரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் முன்பாக கஜேந்திர மோட்ச லீலை நடைபெற்றது. இதையடுத்து, மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT