காஞ்சிபுரம்

மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3 போ் கைது

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மளிகைக் கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 3 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வந்தவா் ஏ.சிவஞானம் (56) (படம். இவரது கடையின் அருகில் சரவணன் என்பவா் துரித உணவகம் நடத்தி வருகிறாா். இவா்கள் இருவருக்கும் நிலம் தொடா்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சிவஞானம் மளிகைக் கடையை அடைத்துவிட்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, சரவணனும் அவரது கூட்டாளிகள் இருவரும் சோ்ந்து சிவஞானத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தனராம்.

ADVERTISEMENT

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராஜகுளம் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடா்பாக சிவஞானத்தின் மனைவி சாந்தி, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப் படையினா் சரவணன் (32), இவரது கூட்டாளிகளான சிட்டியம்பாக்கக்தைச் சோ்ந்த மணிகண்டன் (23), ஆபேல்(24) ஆகிய 3 பேரை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனா்.

கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீஸாரை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகா் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT