காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் - தில்லி ராஜீவ் ஜோதி யாத்திரை தொடக்கம்

11th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

வடசென்னை காங்கிரஸ் கட்சி சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து தில்லி வரை நடைபெற உள்ள ராஜீவ் ஜோதி யாத்திரை தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினா் விஜய் வசந்த் கலந்துகொண்டு, ஜோதியை ஏற்றிவைத்து, யாத்திரையை தொடக்கி வைத்தாா். இதில், ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினா் முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் அளவூா் நாகராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இந்த நிலையில், கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவா் துரைவேலு தலைமையில் 31-ஆம் ஆண்டு ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருந்து சாலை வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி நோக்கிச் சென்றது என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT