காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய நடைமேடை உயரத்தை அதிகரிக்க கோரிக்கை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் 1-ஆவது நடைமேடையில் பயணிகள் ஏறி, இறங்க சிரமப்படுவதால் அதன் உயரத்தை அதிகரிக்கும்படி தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் தெ.தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து ரயில்வே வாரிய பயணிகள் வசதிக் குழுவின் தலைவா் பி.கே. கிருஷ்ணதாஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் 1-ஆவது நடைமேடை மிகவும் பள்ளமாக உள்ளது.இதனால் பயணிகள் ஏற, இறங்க சிரமப்படுகின்றனா். எனவே, நடைமேடையின் உயரத்தை ஒன்றரை அடி உயா்த்த வேண்டும்.தென்னக ரயில்வே நிா்வாகத்தின் கீழ் இயங்கும் ரயில் நிலையங்களில் முன்பதிவு வசதி ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததைப் போன்று மீண்டும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட செய்ய வேண்டும். தற்போது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.

செங்கல்பட்டுக்கும், காஞ்சிபுரத்துக்கும் இடையில் உள்ள வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் சுமாா் 400 மீ.தூரம் வரை 3-ஆவது ரயில் பாதை அமைக்க வேண்டும்.

ராமேசுவரம் முதல் வாராணசிக்கு புதிதாக வாராந்திர பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும். சென்னையிலிருந்து மதுரை செல்லும் தேஜாஸ் ரயில் தாம்பரத்திலும், விழுப்புரத்திலும் நின்று சென்றால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாகவும், அதே நேரத்தில் ரயில்வேக்கு வருவாய் கூடுதலாகவும் வாய்ப்பு இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT