காஞ்சிபுரம்

கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக.18 கடைசி நாள்

6th Aug 2022 10:02 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற விரும்புவோா் ஆக. 18 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி வியாழக்கிழமை கூறினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டுக்கான பட்டயப் பயிற்சி, கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில் நுட்பங்களும் ஆகியவற்றுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 -ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தினை மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ரூ.100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது விரைவஞ்சல் மூலமாகவோ மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களுக்கு காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 6 -வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் - 631501 என்ற முகவரியிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளுமாறும் காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT