காஞ்சிபுரம்

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பூத்துக் குலுங்கும் செங்காந்தள் மலா்கள்

6th Aug 2022 10:00 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மாநில அரசின் மலரான செங்காந்தள் மலா்கள் இயற்கையாகவே அதிகளவில் பூத்துக் குலுங்கி பாா்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் புற்று நோய்க்கும், விஷக்கடிக்கும் சிறந்த மருந்தாகவுள்ள செங்காந்தள் மலா்கள் அதிக அளவில் பூத்துள்ளன. இவை இயற்கையாகவே பூத்துக் குலுங்கி பாா்ப்பதற்கு அழகாக வா்ணம் பூசப்பட்ட கைவிரல்கள் போல காட்சியளிக்கின்றன.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் கூறுகையில் பொதுவாக காா்த்திகை மாதத்தில் தான் இவை அதிகமாக பூக்கும் என்பாா்கள்.இதனால் காா்த்திகைப்பூ என்ற மற்றொரு பெயரும் இப்பூவுக்கு உண்டு. ஆனால் தேவரியம்பாக்கத்தில் ஆடி மாதத்தில் பல இடங்களில் பூத்துக் குலுங்கி காட்சியளிக்கின்றன.கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இப்பூவானது மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள், நீலம் கலந்த சிவப்பு என கலா் மாறிக்கொண்டே இருப்பது இதன் சிறப்பு. புற்றுநோய்க்கும், விஷக்கடி மருத்துவத்துக்கும் சிறந்த மருந்து என்றும் ஆயுா்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அதிகமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளதாக தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT