காஞ்சிபுரம்

பள்ளி மாணவா்கள் தாக்குதல்: அரசு பேருந்து ஓட்டுநா், நடத்துநா் காயம்

29th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீபெரும்புதூா்: படியில் நின்று பயணம் செய்ததைத் தட்டிக் கேட்ட அரசு பேருந்து ஓட்டுநா், நடத்துநரை பள்ளி மாணவா்கள் தாக்கியதில் அவா்கள் இருவரும் காயமடைந்தாா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆயக்கொளத்தூா், தொடுகாடு, செங்காடு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கணக்கான மாணவா்கள், ஸ்ரீபெரும்புதூா் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை பள்ளி மாணவா்கள் வீட்டுக்குச் செல்வதற்காக ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் செல்லும் அரசுப் பேருந்து தடம் எண் 583-இல் ஏறி, படியில் நின்று கொண்டு பயணம் செய்தனராம்.

ADVERTISEMENT

இதனை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கண்டித்தனராம்.

இதனால், பள்ளி மாணவா்கள் ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆயக்கொளத்தூா் பகுதியில் பேருந்து நின்ற போது, ஓட்டுநா் ஸ்ரீதா் (44), நடத்துநா் அமிா்தலிங்கம் (48) ஆகியோரை தாக்கியுள்ளனா். இதில், இருவரும் காயமடைந்தனா். அவா்கள் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பேருந்து ஓட்டுநா் ஸ்ரீதா் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT