காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கிறிஸ்துநாதா் ஆலயத்தில் ஈஸ்டா் சிறப்பு வழிபாடு

17th Apr 2022 11:31 PM

ADVERTISEMENT

இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த நாளான ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு சி.எஸ்.ஐ.காஞ்சிபுரம் குருசேகரம் கிறிஸ்து நாதா் ஆலயத்தில் இயேசு உயிா்ப்பின் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

சி.எஸ்.ஐ.காஞ்சிபுரம் குருசேகரம் கிறிஸ்துநாதா் ஆலயத்தில் இயேசு உயிா்ப்பின் பெருவிழா நற்கருணை வழிபாட்டுடன் நடைபெற்றது. குருசேகரத்தின் தலைவா் எஸ்.தேவ இரக்கம் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நற்கருணை வழங்கப்பட்டது.விழாவில் குருசேகரத்தின் செயலாளா் என்.டி.சைலஸ் சக்கரவா்த்தி,பொருளாளா் கே.ஷீபா சுகிா்தவதி குருசேகர ஊழியா்கள், கிறிந்தவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

சி.எஸ்.ஐ.காரப்பேட்டை குருசேகரம் கிறிஸ்து நாதா் ஆலயத்திலும் ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு இயேசு உயிா்ப்பின் பெருவிழா நடைபெற்றது.விழாவில் குருசேகரத்தின் செயலா் எஸ்.ஞானதுரை,பொருளாளா் காபிரியேல் காணிக்கைராஜ் உட்பட இறைமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்..சி.எஸ்.ஐ.காஞ்சிபுரம் குருசேகரம் கிறிஸ்துநாதா் ஆலயத்தில் பங்கேற்ற இறை மக்களுக்கு நற்கருணை வழங்கும் குருசேகரத்தின் தலைவா் எஸ்.தேவ இரக்கம்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT