காஞ்சிபுரம்

ஏப்.18-இல் தாமல் வராகீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

16th Apr 2022 12:15 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள கெளரி அம்பாள் சமேத வராகீஸ்வரா் கோயிலில் வருகிற 18 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் கெளரி அம்பாள் உடனுறை வராகீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆகம விதிப்படி திருப்பணிகள் நடைபெற்றதை தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 14 -ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. வருகிற 18- ஆம் தேதி (திங்கள்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி மற்றும் தாமல் கிராம மக்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT