காஞ்சிபுரம்

அரசு புற்றுநோய் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் நன்கொடை

16th Apr 2022 12:14 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு தனியாா் தொண்டு நிறுவனம் ஒன்று ரூ.28 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனத்தை வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கியது.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு, ‘மருத்துவா் உங்களுக்காக’ என்ற தொண்டு நிறுவனம் ரூ.28 லட்சம் மதிப்பிலான அதிநவீன கருவிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியிடம் வாகனத்தின் சாவியை தொண்டு நிறுவனத்தின் தமிழக பொறுப்பாளா் சேதுராமன் வழங்கினாா். பின்னா் அந்தச் சாவியை புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் வி.சீனிவாசன் மற்றும் நிலைய மருத்துவ அலுவலா் எஸ்.மனோகரன் ஆகியோரிடம் ஆட்சியா் ஒப்படைத்தாா்.

இந்த வாகனத்தை ஹெச்டிஎப்சி வங்கியானது மருத்துவா் உங்களுக்காக என்ற தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்ததன் அடிப்படையில் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசர சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT