காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு பால்குட திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, 108 பக்தா்கள் பாதாள ஈஸ்வரா் கோயிலிலிருந்து பால்குடங்களை நகரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வந்தனா். பால்குடங்கள் ஆலயத்துக்கு வந்து சோ்ந்ததும் பாலாபிஷேகம் மற்றும் 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் விஸ்வகா்ம அறக்கட்டளை மற்றும் சித்ரா பெளா்ணமி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.