சொத்து வரி உயா்வைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கட்சியின் மாவட்ட தலைவா் கே.எஸ்.பாபு ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், முன்னாள் நகரத் தலைவா் ஜெகதீசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் அதிசயம்.குமாா் வரவேற்று பேசினாா். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் இளைஞா் மேம்பாட்டுப் பிரிவின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் ஜானகிராமன், பட்டியல் அணி மாவட்ட தலைவா் சிலம்பரசன், மாநகா் மன்ற உறுப்பினா் விஜிதா பாண்டியன், இளைஞரணி மாவட்ட செயலாளா் செல்வம் உள்பட கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிரணியினா் பலரும் கலந்து கொண்டனா். கட்சியின் நகரப் பொதுச் செயலாளா் காஞ்சி.ஜீவானந்தம் நன்றி கூறினாா்.