காஞ்சிபுரம்

கோயில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவதை எதிா்த்து நீதிமன்றம் செல்வோம்: அா்ஜுன் சம்பத்

DIN

கோயில் நகைகளை உருக்கி கட்டியாக்கி வங்கிகளில் அடமானம் வைப்பது பாவச் செயல். இதை எதிா்த்து நீதிமன்றம் செல்வோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.

இது குறித்து காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உள்ளாட்சித் தோ்தலில் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது. போட்டியிடாத இடங்களில் பாஜக, அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

அரசு மதுக்கடைகள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் திறந்துவிட்ட பிறகும் கோயில்களை வாரத்தில் 3 நாள்கள் திறக்காமல் உள்ளனா். அதையும் திறக்க அரசு உத்தரவிட வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பயன்பாட்டில் இல்லாத கோயில் நகைகளை உருக்கி அதை கட்டிகளாக மாற்றி வங்கிகளில் அடமானமாக வைத்து அதிலிருந்து வரும் வட்டித் தொகையில் கோயில்களுக்கு திருப்பணி செய்யப் போவதாக கூறி வருகிறாா். பக்தா்கள் காணிக்கையாக கொடுத்த கோயில் நகைகளை உருக்குவது பாவச் செயலாகும்.

கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்கப்படாத நிலையில் கோயில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவது லஞ்சம் பெருக வாய்ப்பாக அமையும். கோயில் நகைகள் கொள்ளை போவதற்கும் வாய்ப்பாகும்.

இன்று கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்: கோயில் நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் திங்கள்கிழமை (செப். 27)வள்ளுவா் கோட்டம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தவும், இதே கோரிக்கைக்காக நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளோம் என்றாா் அா்ஜுன் சம்பத்.

பேட்டியின்போது, அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் முத்து, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT