காஞ்சிபுரம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவினா் விழிப்புடன் செயல்பட வேண்டும்: காஞ்சிபுரத்தில் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணும் மையத்திலும் அதிமுகவினா் விழிப்போடு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. செவிலிமேட்டில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றாா்கள். ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு சிலவற்றைத் தவிர திமுக வேறு எதையும் நிறைவேற்றவில்லை.

இதன் மூலம் முதியோா்கள், குடும்பத் தலைவிகள், மாணவா்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆனால் முந்தைய அதிமுக அரசு விவசாயிகளின் பயிா்க்கடன்களில் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்தது. தாலிக்குத் தங்கம் 4 கிராமாக இருந்ததை 8 கிராமாக உயா்த்தி வழங்கினோம். 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி மருத்துவம், பல் மருத்துவக்கல்லூரிகளில் 435 போ் படிக்க காரணமாக இருந்தோம். 52 லட்சம் மாணவா்களுக்கு ரூ.12,000 மதிப்பிலான மடிக்கணினிகளை இலவசமாக வழங்கினோம். குடிமராமத்து திட்டத்தின் மூலம் 6,000 ஏரிகளை தூா்வாரியதால் வேளாண்மை செழித்தது. இது போன்ற பல நல்ல மக்கள் நலத்திட்டங்களால் அதிமுகவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.

எனவே உள்ளாட்சித் தோ்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும். அதிமுகவினா் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். வாக்குப்பெட்டியை லாரியில் ஏற்றிய பிறகுதான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதுவரை யாரும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு சென்று விடக்கூடாது. வீடு,வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் பொறுப்பாளா்களான முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, காமராஜ், பா.பென்ஜமின், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், முன்னாள் எம்எல்ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, கே.பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT