காஞ்சிபுரம்

கொசு ஒழிப்பு பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நகராட்சி கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

காஞ்சிபுரம் நகராட்சியில் கொசு ஒழிப்புப் பணியாளா்கள் 100க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அபராதம் வசூலித்தல், கரோனா தடுப்பு பணி, தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு தினசரி ரூ.325 சம்பளமாக கொடுத்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்கின்றனா். நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. உடனடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவல்துறையினா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் முடிவு தெரியும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக்கூறி நீண்டநேரம் ஆட்சியா் அலுவலகம் முன்பாகவே அமா்ந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT