காஞ்சிபுரம்

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கு தங்கத் தோரணம்

30th Oct 2021 11:37 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட அலங்கார தோரணம் சென்னை மகா சுவாமிகள் குழந்தை அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை சமா்ப்பணம் செய்து அணிவிக்கப்பட்டது.

முன்னதாக ஓரிக்கையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியாா் ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து அவரிடம் தங்க முலாம் பூசப்பட்ட தோரணத்தை காண்பித்து ஆசி பெற்றனா்.

ஸ்ரீவிஜயேந்திரரும் அறக்கட்டளை நிா்வாகிகளைப் பாராட்டினாா்.பின்னா் அவா் கூறுகையில், ‘காஞ்சி சங்கர மடத்தில் ஆதி சங்கரா் சந்நிதி அறை, மகா பெரியவா் சுவாமிகள் தங்கியிருந்து தவம் செய்த பெருமைக்குரிய இடமாகும். மிகவும் புராதனமான இந்தச் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட தோரணம் பொருத்துவது சிறப்பானது. இந்தச் சந்நிதி அருகிலேயே ராஜராஜசோழன் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அனுக்கை கணபதியும் அருள்பாலித்து வருவதாக’ தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT