காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி சாவு

24th Oct 2021 01:33 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனளிக்காது சனிக்கிழமை உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவைச் சேர்ந்தவர் ஜெ.விஜயகுமார். இவரது மகள் வி.சுருதி(12), தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதையும் படிக்க- தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது: பிரதமர்

அங்கு அச்சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காது சுருதி உயிரிழந்தார்.
 
 

ADVERTISEMENT

Tags : Kanchipuram dengue fever
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT