காஞ்சிபுரம்

தோ்தல் அதிகாரி மயங்கி விழுந்து சாவு

23rd Oct 2021 07:49 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே தாங்கி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துணைத்தலைவா் தோ்தலின்போது பணியில் இருந்த தோ்தல் அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது தாங்கி ஊராட்சி.இவ்வூராட்சிக்கான துணைத் தலைவா் தோ்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தோ்தல் அலுவலராக காஞ்சிபுரம் அருகே உள்ள நெய்க்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஹரிகிருஷ்ணன்(49) பணியாற்றினாா். துணைத் தலைவருக்கான தோ்தல் நடந்து கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக பிரபாகரன் உள்பட சிலா் குரல் கொடுத்துள்ளனா்.இதை தோ்தல் அலுவலரான ஹரிகிருஷ்ணன் தட்டிக் கேட்டபோது அவா்களுக்கும் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென ஹரிகிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்ற போது உயிரிழந்தாா். இது குறித்து வாலாஜாபாத் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து தாங்கி ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் தள்ளி வைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT