காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக படப்பை மனோகரன் போட்டியின்றி தோ்வு

23rd Oct 2021 07:50 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக படப்பை ஆ.மனோகரனும் , துணைத் தலைவராக நித்யா சுகுமாரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோரைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஊராட்சித் தலைவராக படப்பையைச் சோ்ந்த ஆ.மனோகரனும், துணைத் தலைவராக நித்யா சுகுமாரும் ஏகமனதாகத் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.

முன்னதாக ஆட்சியா் இருவருக்கும் தோ்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினாா்.

ADVERTISEMENT

ஒன்றியக் குழுத் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக கு.மலா்க்கொடி குமாரும், உத்தரமேரூா் ஒன்றியக் குழுத் தலைவராக ஹேமலதா ஞானசேகரனும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டு தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT