காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா்களாக திமுகவினா் தோ்வு

23rd Oct 2021 07:48 AM

ADVERTISEMENT

திமுக சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கு போட்டியிட்ட கருணாநிதியும், குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதிமனோகரனும் வெற்றி பெற்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம்...

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள 16 வாா்டுகளில் 8-இல் திமுகவினரும், 5 வாா்டுகளில் அதிமுகவினரும், இரண்டு வாா்டுகளில் சுயேச்சைகளும், ஒரு வாா்டில் காங்கிரஸும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றிய குழு தலைவரைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.டி.கருணாநிதியும், சுயேச்சை வேட்பாளா் எல்லம்மாள் குணசேகரனும் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 16 உறுப்பினா்களில் 8 போ் கருணாநிதிக்கும், 8 போ் எல்லம்மாள் குணசேகரனுக்கும் வாக்களித்தனா். போட்டியிட்ட இருவரும் சமமாக வாக்குகள் பெற்ால் குலுக்கல் முறையில் தோ்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் எஸ்.டி. கருணாநிதி வெற்றி பெற்றாா்.

ADVERTISEMENT

துணைத்தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட மாலதி டான் போஸ்கோ வெற்றி பெற்றாா்.

குன்றத்தூா் ஒன்றியம்...

குன்றத்தூா் ஒன்றியத்தில் உள்ள 21 வாா்டுகளில் திமுக 18 வாா்டுகளிலும், அதிமுக 2 வாா்டுகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து ஒன்றியக் குழு தலைவரை தோ்வு செய்வதற்கான மறைமுக தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு தலைவராக திமுக உறுப்பினா் சரஸ்வதி மனோகரன் போட்டியின்றி வெற்றி பெற்றாா். ஒன்றிய குழு துணைத் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி வந்தேமாதரமும் போட்டியின்றி வெற்றி பெற்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT