காஞ்சிபுரம்

காவலா் வீர வணக்க நாள்: 63 குண்டுகள் முழங்க அஞ்சலி

22nd Oct 2021 07:58 AM

ADVERTISEMENT

காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆயுதப் படை மைதானத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் காவல் துறை உயா் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

ஆண்டுதோறும் அக். 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உயிா்த்தியாகம் செய்த காவலா்களுக்கான நினைவுச் சின்னம் காஞ்சிபுரம் ஆயுதப் படை மைதானத்தில் உள்ளது. இங்கு, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 63 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்தியப்பிரியா, எஸ்.பி.எம்.சுதாகா் மற்றும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் பலா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். நினைவுச் சின்னம் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT