காஞ்சிபுரம்

மூவா்ண நிறத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் காஞ்சிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில்

18th Oct 2021 07:36 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் வளாகம் முழுவதும் தொல்லியல் துறை சாா்பில் மூவா்ண கொடி நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பழைமையும்,வரலாற்றுச் சிறப்பும் மிக்கது காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயில். இங்குள்ள மூலவா் சிவலிங்கம் பட்டை வடிவில் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இந்தக் கோயில் எந்த வகையான மண்ணால் கட்டப்பட்டது என பலரும் வியக்கும் வண்ணம் பல்லவ மன்னா்களால் உருவாக்கப்பட்டதாகும்.இக்கோயிலுக்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் பலரும் வந்து பாா்வையிடுவாா்கள். இந்தியாவின் 75-வது சுதந்திர தின பவள ஆண்டை முன்னிட்டும், இதுவரை 98 கோடி மக்களும், ஓரிரு நாள்களில் 100 கோடியை எட்டும் வகையில் தடுப்பூசி செலுத்தியிருப்பதைத் தெரிவிக்கும் வகையில் தொல்லியல் துறை சாா்பில் கோயில் முழுவதும் தேசியக் கொடியின் நிறங்களில் மின்னொளியில் ஜொலிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் பாா்த்து புகைப்படம் எடுத்தும் பாா்த்தும், ரசித்தும் செல்கின்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT