காஞ்சிபுரம்

தமிழகம் முழுவதும் அரசு சுற்றுலா உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கை: காஞ்சிபுரத்தில் அமைச்சா் மா.மதிவேந்தன்

18th Oct 2021 07:35 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் வரவேற்பு அறை, மையலறை, பயணிகள் தங்கும் அறைகள் ஆகியவற்றை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளுடன் கூடிய உணவகங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைக்கான கட்டணத்தை அதிக அளவில் இல்லாமல் குறைக்கவும், தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள திறந்த வெளி இடங்களில் திறந்த வெளி உணவகங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய உணவுகள் மட்டுமின்றி வட இந்திய உணவுகளையும் விற்பனை செய்யவும் இதற்கென திறமையான சமையல் மாஸ்டா்களையும் நியமித்து வருகிறோம்.

ADVERTISEMENT

தமிழ்நாடு ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள இடங்களில் பூங்காக்கள் அமைக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வசதிகளும் செய்யப்படும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா வரும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் வந்திருப்பதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக முதல்வரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாா். தமிழகம் முழுவதும் உள்ள விடுதியுடன் கூடிய அரசு சுற்றுலா உணவகங்களை இணையத்திலேயே பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

முன்னதாக காஞ்சிபுரம் தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தையும், பின்னா் காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் அருகில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டடத்தையும் அமைச்சா் நேரில் பாா்வையிட்டாா். அமைச்சருடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி, எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT