காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் தசம சண்டி யாகம் நிறைவு

16th Oct 2021 07:40 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஸ்ரீஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரியை ஒட்டி நடைபெற்று வந்த தசம சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 6-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

உலக நன்மைக்காகவும்,கரோனா நோய்த் தொற்றிலிருந்து விடுபடவும் வேண்டி தசம சண்டி யாகம் நடைபெற்று வந்தது. 9-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இந்த யாகம் பூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்கள் யாகத்தை நடத்தினா். மூலவா் ஆதிகாமாட்சி தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தசம சண்டி யாகம் நிறைவு நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா்கள் ஆ.குமரன், வெள்ளைச்சாமி, காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். இரவு அம்மன் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வன்னிமர பூஜையும், பாா்வேட்டை உற்சவமும் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT