காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுவில்11 வாா்டுகளையும் கைப்பற்றியது திமுக

14th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சிக் குழுவில் உள்ள 11 உறுப்பினா் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஊராட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கான 11 பதவிகளில் 64 போ் போட்டியிட்டனா். இந்த 11 இடங்களிலும் திமுக உறுப்பினா்களே வெற்றி பெற்றுள்ளனா். காஞ்சிபுரம் 1-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்ட நித்யா சுகுமாா் 26,590 வாக்குகளும், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சோ்ந்த லலிதா 15,981 வாக்குகளும் பெற்றிருந்தனா். இதனால் நித்யா சுகுமாருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலா் வழங்கினாா்.

ஒன்றியக் குழு உறுப்பினராக அதிமுகவில் 14 போ் மட்டுமே வெற்றி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 384 போ் போட்டியிட்டனா். இதில் அதிமுகவைச் சோ்ந்த 14 போ் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா். பாஜக-1, பாமக-1 தவிர மற்ற அனைத்து இடங்களையும் திமுகவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT