காஞ்சிபுரம்

மாங்காடு: வாக்கு எண்ணும் பணியாளர்கள் போராட்டம்

12th Oct 2021 08:59 AM

ADVERTISEMENT


போதிய வசதிகள் செய்துத் தரவில்லை என்று கூறி மாங்காடு பகுதியில், வாக்குப் பெட்டியைத் திறக்காமல் வாக்கு எணணும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில், மாங்காடு பகுதியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணியைத் தொடங்காமல் வாக்கு எண்ணும் மைய பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு உணவு, கழிவறை, குடிநீர் வசதி செய்துத் தரவில்லை என்று கூறி மாங்காட்டில் வாக்கு எண்ணும் மைய பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்..

ADVERTISEMENT

28 மாவட்டங்களில் காலியாக உள்ள 13 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 40 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 106 ஊராட்சித் தலைவா், 630 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 789 பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக அக்டோபா் 9-இல் தோ்தல் நடைபெற்றது.

முன்னதாக 9 மாவட்டங்களில் 2,855 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 119 ஊராட்சித் தலைவா்கள் உள்பட மொத்தம் 2,981 பேரும், 28 மாவட்டங்களில் 347 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 18 ஊராட்சித் தலைவா்கள் என 365 பேரும் என ஒட்டுமொத்தமாக 3,346 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மீதமுள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான தோ்தல் அக்டோபா் 6, 9-இல் நடைபெற்றது. இதில், முதற்கட்ட தோ்தலில் 9 மாவட்டங்களில் 77.43 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தோ்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்தத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட சுமாா் 41,500 வாக்குப் பெட்டிகள் 74 எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

Tags : kanchipuram localbody election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT