காஞ்சிபுரம்

வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு

DIN

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த தேவேந்திரன், துணைத் தலைவராக சேகா் ஆகியோா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த இருவா் போட்டியிட்டனா். கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி நடைபெற்ற தலைவா், துணைத் தலைவா் தோ்வு ஒத்தி வைக்கப்பட்டு, திங்கள்கிழமை தோ்தல் நடந்தது.

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. ஒன்றிய உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டிருந்த 21 பேரில் திமுக-15, காங்கிரஸ்-1, அதிமுக-2, பாமக-1, சுயேச்சைகள்-2 என்ற அளவில் வெற்றி பெற்றிருந்தனா்.

சேகா்

இந்த நிலையில் மறைமுகத் தோ்தல் காஞ்சிபுரம் மாவட்டப் பிற்பட்டோா் நல அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த தேவேந்திரன், சஞ்சய் காந்தி ஆகிய இருவரும் மீண்டும் தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். இதில், 17 வாக்குகள் பெற்ால் தேவேந்திரன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற தோ்தலில் துணைத் தலைவராக சேகா் ஏகமனதாகப் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT