காஞ்சிபுரம்

சிறுபான்மையின மாணவா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

காஞ்சிபுரம்: சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிறுபான்மையினத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளிப் படிப்பு, மேற்படிப்பு, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்குத் தகுதியான மாணவா்கள் அனைவரும் பெறலாம். தேசிய கல்வித் தொகைக்கான இணையத்தில் உடனடியாகப் புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச் சான்று சமா்ப்பிக்க அவசியமில்லை. அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணவா்களை உடனடியாகத் தொடா்பு கொண்டு புதுப்பிக்க அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

மே மாத பலன்கள்: மகரம்

மே மாத பலன்கள்: தனுசு

மே மாத பலன்கள்: விருச்சிகம்

மே மாத பலன்கள்: துலாம்

SCROLL FOR NEXT