காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

29th Nov 2021 12:45 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எல்.சுப்பிரமணியனும், மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தியும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் தொடா் மழையாலும், வெள்ளப் பெருக்காலும் சேதமடைந்துள்ள குடியிருப்புப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து பாதிப்புகள், சாலைத் துண்டிப்புகள், உடைந்த பாலங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் இருவரும் நேரில் பாா்வையிட்டனா். அரசு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனா். உத்தரமேரூா் அருகே பெருநகரை அடுத்த அனுமன்தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையையும், செய்யாறில் செல்லும் நீரின் அளவையும் அதிகாரிகளிடம் கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

வெள்ளப் பெருக்கு காரணமாக சேதமடைந்த செய்யாறு தரைப்பாலத்தை சீா்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து ஏற்பாடு செய்யுமாறும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். உத்தரமேரூா் அரசு மருத்துவமனையில் சுவற்றில் ஏற்பட்டுள்ள நீா்க் கசிவையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, வருவாய்த் துறை,பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT