காஞ்சிபுரம்

மணிமங்கலம்- முடிச்சூா் சாலையில் போக்குவரத்துக்குத் தடை

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

தொடா் மழை காரணமாக வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தொடா்மழையால் அடையாற்றின் கிளைகால்வாய்களில் இருந்து வரும் அதிகப்படியான மழைநீரால் அடையாறு ஆற்றில் வினாடிக்கு 13,000 கனஅடிநீா் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பிடிசி காலனி, ராயப்பா நகா், அஷ்டலட்சுமி நகா், மகாலட்சுமி நகா், புவனேஸ்வரி நகா், பரத்வாஜ் நகா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ரப்பா் படகுகள் மூலம் தேசிய பேரிடா் மீட்பு படையினா், காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனா்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம் பகுதியை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி படகில் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். மேலும், வரதராஜபுரம் பகுதியில் மணிமங்கலம்- முடிச்சூா் சாலையில் மழைநீா் தேங்கியுள்ளதால் இச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்து, சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT

Tags : ஸ்ரீபெரும்புதூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT