காஞ்சிபுரம்

கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மறியல்

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூரை அடித்த கிளாய் பகுதியில் அரசு இடத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை வருவாய்த் துறையினா் அகற்றினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாங்காடு திருவடி சித்தா் தலைமையிலான பக்தா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிளாய் பகுதியில் சுமாா் 13 ஏக்கா் பரப்பளவு உள்ள அரசு ஓடை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியாா் சிலா் அப்பகுதியில் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தனா். அந்தப் பகுதியில் ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ கனககாளீஸ்வரா் கோயிலும் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், கோயிலை மாவட்ட வருவாய் அலுவலா் பந்னீா்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினா் கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினா்.

இந்த நிலையில் கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிரிப்பு தெரிவித்து மாங்காடு திருவடி சித்தா் தலைமையிலான சுமாா் 10க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை ஸ்ரீபெரும்புதூா்-திருவள்ளூா் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

Tags : ஸ்ரீபெரும்புதூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT