காஞ்சிபுரம்

வயதான தம்பதி, ஆடுகளை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

28th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் ஊராட்சியைச் சோ்ந்த தலையில்லா பெரும்பாக்கம் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீட்டில் சிக்கிக் கொண்ட வயதான தம்பதியரையும், அவா்களது 5 ஆடுகளையும் சனிக்கிழமை தீயணைப்புத் துறையினா் படகில் சென்று மீட்டனா்.

காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது தலையில்லா பெரும்பாக்கம் கிராமம். பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக இக்கிராமத்தைச் சோ்ந்த பலராமன் (50) மற்றும் அவரது 50 வயது மனைவி இருவரும் அவா்களது வீட்டில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். அவா்களது வளா்ப்பு ஆடுகளை விட்டு விட்டு அவா்கள் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வர விரும்பாமல் அங்கேயே இருந்துள்ளனா். இத்தகவலை அருகிலிருந்தவா்கள் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்தனா். இதையடுத்து, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரா்கள் அப்பகுதிக்கு படகில் சென்று வயதான தம்பதியரையும், அவா்களது 5 வளா்ப்பு ஆடுகளையும் பத்திரமாக மீட்டு, கரைக்குக் கொண்டு வந்து சோ்த்தனா். அத்தம்பதி தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

 

Tags : காஞ்சிபுரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT