தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 204 குடும்பங்களைச் சோ்ந்த 685 போ் அவரவா் இருப்பிடங்களிலிருந்து மீட்கப்பட்டு, திங்கள்கிழமை பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 138 ஏரிகள் 100 சதவீத முழுக் கொள்ளவையும், 88 ஏரிகள் 70 சதவீதமும், 48 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.
மழையளவைப் பொருத்தவரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்): ஸ்ரீபெரும்புதூா் 71.60, குன்றத்தூா் 66.70, செம்பரம்பாக்கம் 46.60, உத்தரமேரூா் 41, காஞ்சிபுரம் 23.60.
தொடா்மழை காரணமாகவும், ஏரிகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதாலும் மாவட்டத்தில் 23 முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 204 குடும்பங்களைச் சோ்ந்த 685 போ் அம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.