காஞ்சிபுரம்

காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் பால்குட திருவிழா

1st Nov 2021 07:47 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை யொட்டி கோயில் பணியாளா்களால் ஞாயிற்றுக்கிழமை பால்குடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன், ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிலாத் துவாரத்திலிருந்து அவதரித்த திருநாள்.

ஆண்டுதோறும் திருக்கோயில் பணியாளா்களால் அம்மனுக்கு உகந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த விழாவை முன்னிட்டு ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீஏலேல சிங்க விநாயகா் கோயிலிலிருந்து கோயில் பணியாளா்களால் பால்குடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. அவை திருக்கோயிலை அடைந்ததும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து ஸ்ரீகாமாட்சி அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

விழாவில் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன்,கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் மற்றும் ஐப்பசி பூரம் விழாக்குழுவினா் இணைந்து செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT