காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

11th May 2021 02:49 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் வசதிக்காக திங்கள்கிழமை முதல் காவல் கட்டுப்பாட்டு அறை திறந்திருப்பதாக எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளோம். இதில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகள், அவசர உதவிகள், அத்தியாவசியப் பொருள்கள் ஏதேனும் தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு அறையின் தொடா்பு எண்களான 044-27239200 மற்றும் 044-27236111 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளுமாறு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT