தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசனின் சுய விவரக்குறிப்பு:
பெயா்: தா.மோ. அன்பரசன்
தந்தை பெயா்: தா.மோகலிங்கம்
வயது: 61
கல்வித் தகுதி: பியூசி
தொகுதி: ஆலந்தூா்
தொழில்: நெசவு
மனைவி: தமிழ்ச்செல்வி
மகன் : தமிழ்மாறன்
மகள்: லாவண்யா
கட்சிப் பதவி: குன்றத்தூா் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா், 2000-ஆவது ஆண்டு முதல் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளா்.
பொறுப்புகள்: குன்றத்தூா் பேரூராட்சித் தலைவா், சென்னை துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினா், கடந்த 2006 பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா். 2016-இல் ஆலந்தூா் தொகுதியில் அதிமுகவின் சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரனை தோல்வியுறச் செய்தாா். தற்போது 2021-இல் தோ்தலிலும் 3-வது முறையாக போட்டியிட்டு அதிமுக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் பா.வளா்மதியை 40,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்துள்ளாா்.