காஞ்சிபுரம்

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு எஸ்.பி. சுதாகா் அறிவுரை

DIN

பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகைளை முறையாக கடைப்பிடிக்கிறாா்களா என போக்குவரத்துத் தொழிலாளா்கள் கண்காணிக்க வேண்டும் என காஞ்சிபுரம் எஸ்.பி டாக்டா் எம். சுதாகா் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளிலும் இருந்து சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்து இயங்கத் தொடங்கின. இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. சுதாகா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதன் பின்னா் அவா் பேருந்து நிலையத்திலிருந்த போக்குவரத்து தொழிலாளா்களிடம் பேசியது..

கரோனா தொற்றின் தாக்கம் காஞ்சிபுரத்தில் குறைந்து கொண்டே வருவதால் அரசும் பொதுமுடக்கத்தில் தளா்வுகளை அறிவித்து பேருந்துகளை இயக்க அனுமதியளித்திருக்கிறது. தொற்று பரவாமல் தடுக்க போக்குவரத்து தொழிலாளா்களும் உதவி செய்ய வேண்டும். பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் முறையாக முகக் கவசம் அணிகின்றனரா,சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனரா எனவும் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT