காஞ்சிபுரம்

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

15th Jun 2021 06:40 PM

ADVERTISEMENT


ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சரது அறிவிப்பை வரவேற்கிறோம் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கு. தியாகராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1.25 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 

காஞ்சிபுரம் எம்.பி.ஜி. செல்வம், சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் தலைவர் கு. தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

இதன் பின்னர் கு. தியாகராஜன் தெரிவித்தது.

ADVERTISEMENT

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாகவே ஆசிரியர் நியமனங்கள் முறையாக நடக்காமல் இருந்து வந்தது.

காலிப்பணியிடங்கள் பல இருந்த நிலையில் செயற்கையான முறையில் பல பணியிடங்களை உருவாக்கி வேலையில்லாத இளைஞர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பல நேரங்களில் வலியுறுத்தியும் இருக்கிறோம்.

புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின் ஆசிரியர்களின் பல ஆண்டு கனவுகளைத் தீர்த்து வைப்பார் என பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள், பயிற்சி முடித்த ஆசிரியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவே கல்வி அமைச்சரின் அறிவிப்பும் இருக்கிறது.

எனவே, அந்த அறிவிப்பை வரவேற்பதாகவும் கு. தியாகராஜன் தெரிவித்தார்

பேட்டியின் போது சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வந்தனா உள்ளிட் பலரும் உடன் இருந்தனர்.

Tags : teachers
ADVERTISEMENT
ADVERTISEMENT